'Surgical Strike' என்றால் என்ன?
தீவிரவாதிகள் மீது இந்தியப் படைகள் 'Surgical Strike' என்ற டைப் தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் அறிவித்தது. 'Surgical Strike' என்றால் படைகள் குறிப்பிட்ட இலக்கை, கனக்கச்சிதமாக திட்டமிட்டு எதிர்பாராத விதமாக தாக்கி, மீண்டும் நம் நாட்டுக்குள் வந்துவிடுவார்கள். ஸ்கெட்ச் மிகவும் பலமாக இருக்குமாம்.
இந்திய ராணுவம் மேற்கொண்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக்..! என்ன அது?
செப்டம்பர் 29ம் தேதி அதிகாலையில் இந்திய ராணுவத்தின் ஸ்பெஷல் கமாண்டோ படை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து அதிரடித் தாக்குதல் நடத்தி 38 தீவிரவாதிகளை கொன்றது. சுமார் 2 கிலோமீட்டர்கள் வரை பாகிஸ்தான் எல்லைக்குள் இந்த படை ஊடுருவிச் சென்று, தீவிரவாதிகளின் 7 தீவிரவாத முகாமை அழித்துள்ளனர். இதில் 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதிகாலை 12.30 மணிக்கு தொடங்கி 4.30 மணிக்கு வேட்டை முடிந்துள்ளது. இது போன்ற அட்டாக்கை Surgical Strike (சர்ஜிகல் ஸ்டிரைக்) என்று கூறுகிறார்கள்
சர்ஜிகல் ஸ்டிரைக் என்றால் என்ன?
எல்லைத்தாண்டி, இந்திய ராணுவத்தின் சிறப்பு கமாண்டோ பிரிவு நடத்தும் ஒரு சர்பிரைஸ் தாக்குதலுக்கு பெயர் தான் சர்ஜிகல் ஸ்டிரைக். ஒரு பிசுரு கூட இல்லாமல் துல்லியமாக இலக்கு அழிக்கப்படும்.
இது எப்போது நடத்தப்படும்?
தீவிரவாதிகளால் நாட்டின் பாதுகாப்புக்கு ஹை அலர்ட் ஏற்படும் போது தாக்குதல் நடத்த முடிவு எடுக்கப்படும். தீவிரவாதிகளின் நடமாட்டம் பற்றி உளவு பிரிவிலிருந்து மிகவும் உறுதிபடுத்தப்பட்ட தகவல் கிடைத்தால் மட்டுமே இந்த தாக்குதல் முன் எடுக்கப்படும்.
இதை நடத்துவது யார்?
தீவிர பயிற்சிக்கு உட்படுத்தப்பட்ட ராணுவ கமாண்டோக்கள் தான் பெரும்பாலும் இந்த தாக்குதலில் ஈடுபடுவார்கள். தாக்குதல் நடத்த இந்த கமாண்டோ படை 365 நாட்களும் தயாராக இருக்கும். அதி நவீன ஆயுதங்களை கையாளுவதில் இவர்கள் கில்லி. அடர்ந்து காட்டுப்பகுதியின் இருட்டுக்குள் ஊடுருவ உதவும் நைட் விஷன் கிளாஸ், புல்லெட் ப்ரூஃப் ஜாக்கெட்கள் என இந்த படை ஹை டெக்காக இருக்கும். எதிர்பாராத ஆபத்துக்களை சாதுர்யமாக கையாளும் திறன் படைத்திருக்கும்.
பிளான் என்ன ?
ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன் தான் தாக்குதல் நடத்துவது பற்றி பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், ராணுவ தளபதி, பாதுகாப்பு ஆலோசகர் கொண்ட உயர்மட்டக் குழு முடிவு எடுக்கும். உடனடியாக கமாண்டோ குழு அழைக்கப்படும். தாக்க வேண்டிய இலக்கு எங்கிருக்கிறது, அதன் வரைபடம், எத்தனை பேர், எவ்வளவு நேரம் போன்ற தகவல்கள அவர்களுக்கு கொடுக்கப்படும். அதை வைத்து அதிவேகமாக தாக்குதலை செயல்படுத்துவது பற்றி திட்டமிடப்படும். அதிகாலையில் தான் இந்த ஸ்டிரைக் நடக்கும். அது தானே சர்ப்பிரஸ்!.
உயர்மட்டக் குழு இதனை உன்னிப்பாக கவனிக்கும். எல்லைத் தாண்டிய தாக்குதல் என்பதால், போர் சூழல் எழும் ஆபத்து உள்ளது. இதனால் இந்த உயர்மட்டக் குழு மிக கவனமாக இருக்கும்.
ஆப்ரேஷன் தொடங்குவது எப்படி?
போர் விமானம் மூலம் பேராசூட்டிலோ அல்லது ஹெலிகாப்டர் மூலமோ எல்லையில் வீரர்கள் இறக்கி விடப்படுவார்கள். எதிர்நாட்டு எல்லைக்குள், ஏற்கெனவே போடப்பட்ட பிளான் படி இலக்கை நோக்கி அணிகளாக பிரிந்து முன்னேறுவார்கள். பாதையில்லாத கடுமையான காட்டுப்பகுதிகளில் 7 கிலோமீட்டர்களை இரண்டு மணி நேரத்தில் கடக்கும் அளவுக்கு இவர்களின் வேகம் இருக்கும்.
தீவிரவாதிகளின் இருப்பிடத்தை அடைந்தவுடன், தான் ஸ்கெட்ச் படி அட்டாக் நடக்கும். ஒரு குழு ஆயுத தாக்குதல் நடத்தி முன்னேறும். மற்றொரு குழு முகாமைச் சுற்றி வளைத்து தீவிரவாதிகள் தப்பிக்காத படி அணைக்கட்டும்.
சட்டு சட்டு என சத்தமே இல்லாமல் காரியத்தை முடித்துவிட்டு, முன்னர் பிளான் செய்யப்பட்ட நேரத்துக்குள் மீண்டும் எல்லை திரும்புவர். காரியம் கச்சிதமாக முடிந்த பின்னர், ‘உங்க எல்லைக்குள்ள புகுந்து சம்பவம் செஞ்சிட்டோம்’, என்று எதிரிநாட்டுக்கு சொல்வது தான் சர்ஜிகல் ஸ்டிரைக்கின் ஸ்டைல். இது தான் சர்ஜிகல் ஸ்டிரைக்.
இந்த தாக்குதல் போருக்கான தொடக்கப் புள்ளி என்று அர்த்தமில்லை. இது நாட்டு பாதுகாப்புக்காக முன்னெடுக்கப்படும் தற்காப்பு.
No comments:
Post a Comment