தமிழக முதல்வர் நேற்று இரவு 11:30 மணி அளவில் காலமானார் என்கிர உண்மை தமிழ்க மக்கள் ஏதுக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏர்ப்பெட்டுள்ளத். அது வரை மக்கள் சப்தம்பர் 22 ம் தேதி முதல் அபோளொ மருத்துமனயில் தீவ்ர சிகிச்சையிலிருந்த முதலமைச்சருடய உடல் நிலை சீரடைய பல வகையான ப்ரார்தனைகளையும் செய்து வந்தனர். திடீரென ஏர்பெட்ட மாறடைப்பால் எல்லா முயற்சியும் வீணாய் போனத்.
அம்மா சிறந்த முதல்வரா இல்லையா தெரியாது, அவர் கொண்டுவந்த திட்டங்கள் எல்லாம் மக்களுக்கு பலனளித்தனவா தெரியாது, எம்ஜிஆர் அளவுக்கு நற்காரியங்களை செய்திருக்கிறாரா தெரியாது, கலைஞரை விட அரசியல் ஞானம் கொண்டவரா தெரியாது, தமிழகத்தின் மேல் உண்மையிலேயே பற்று கொண்டவரா தெரியாது, இது எதுவுமே தெரியாமல் போனாலும் ஒன்று மட்டும் நன்றாகத்தெரியும், இத்தனை ஆண் சிங்கங்கள் நடமாடும் அரசியல் காட்டுக்குள் ஒற்றை பெண்சிங்கமாய் உள்ளே நுழைந்து தனியொரு பெண்மணியாய் பல ஆண்டுகளாக ராஜ தர்பார் செய்தவர்! இவர்களை போன்ற ராஜதந்திரிகளுக்கு மத்தியில் வேறொரு பெண்ணால் இப்படி சாதிக்க முடியுமா என்றால் நிச்சயம் பெருத்த சந்தேகம் தான்! கணவனோடும் குடும்பத்தோடும் சிறு சிறு பிரச்சனைகள் என்றாலே உடைந்து போவதும், சிதைந்து போவதும், செத்துப்போவதுமாய் இருக்கின்ற பெண்களுக்கு மத்தியில் கடைசிவரை போர்க்களத்தில் நின்று, வென்றாலும் வீழ்ந்தாலும் மீண்டும் எழுந்து நடந்து எல்லோரையும் அதிரவைத்த அந்த தைரியத்தை ஒவ்வொரு பெண்ணும் கற்றுக்கொள்ள வேண்டும்!
Note:- May her soul rest in peace! Just now her mortal remains are burried at Marina beach next to her mentor late MGR's memorial, renovation for which she herself was responsible.
No comments:
Post a Comment