September 25, 2019

Think Positive!

நெகடிவ் வார்த்தைகளுக்கும் பாசிடிவ் விளக்கம்.

FAIL  என்ற வார்த்தைக்கு 'first Attempt In Learning', அதாவது கற்றுக்கொள்வதற ்கான முதல் வாய்ப்பு' என்பது அதன் பொருளாகும்.

END  என்பதற்கு ‘Effort Never Dies'. அதாவது முயற்சி ஒரு போதும் தோற்பது இல்லை' என்பது அதன் பொருளாகும்.

NO  என்ற வார்த்தைக்கு Next Opportunity, அதாவது அடுத்த வாய்ப்பு' என்பது அதன் பொருளாகும்..!!!
***

September 10, 2019

മാവേലി ഗീതം

മാവേലി നാടു വാണീടും കാലം മാനുഷരെല്ലാരുമൊന്നുപോലെ ആമോദത്തോടെ വസിക്കും കാലം ആപത്തങ്ങാർക്കുമൊട്ടില്ലതാനും

ആധികൾ വ്യാധികൾ ഒന്നുമില്ല ബാലമരണങ്ങൾ കേൾപ്പാനില്ല പത്തായിരമാണ്ടിരിപ്പുമുണ്ട്
പത്തായമെല്ലാം നിറവതുണ്ട്

എല്ലാകൃഷികളുമൊന്നുപോലെ നെല്ലിനു നൂറുവിളവതുണ്ട്
ദുഷ്ടരെ കൺകൊണ്ടു കാണ്മാനില്ല നല്ലവരല്ലാതെയില്ലപാരിൽ

ഭൂലോകമൊക്കെയുമൊന്നുപോലെ
ആലയമൊക്കെയുമൊന്നുപോലെ
നല്ല കനകം കൊണ്ടെല്ലാവരും നല്ലാഭരണങ്ങളണിഞ്ഞുകൊണ്ട്

നാരിമാർ ബാലൻമാർ മറ്റുള്ളോരും നീതിയോടെങ്ങുംവസിച്ചകാലം
കളളവുമില്ല ചതിയുമില്ല
എള്ളോളമില്ല പൊളിവചനം

വെളളിക്കോലാദികൾ നാഴികളും എല്ലാംകണക്കിനുതുല്യമായി കളളപ്പറയും ചെറുനാഴിയും കളളത്തരങ്ങൾ മറ്റൊന്നുമില്ല

നല്ലമഴപെയ്യും വേണ്ടുംനേരം നല്ലപോലെല്ലാവിളവും ചേരും...!!!

എല്ലാവർക്കും എെശ്വര്യപൂർണ്ണമായ ഒരു ഓണം ആശംസിക്കുന്നു.
🙏



September 06, 2019

ശിവതാണ്ഡവ സ്തോത്രം



ശിവായ നമഃ
(രാവണകൃതം ശിവതാണ്ഡവ സ്തോത്രം).

ജടാ ടവീ ഗലജ്ജല പ്രവാഹ പാവിത സ്ഥലേ
ഗലേവലംബ്യ ലംബിതാം ഭുജംഗതുംഗമാലികാം,
ഡമ ഡ്ഡമ ഡ്ഡമ ഡ്ഡമന്നി / നാദവ ഡ്ഡമർ-വയം
ചകാര ചംഡതാംഡവം തനോതു നഃ ശിവഃ ശിവം.1

ജടാകടാഹ സംഭ്രമ ഭ്രമ-ന്നിലിംപ നിർഝരീ
വിലോലവീചി വല്ലരീ വിരാജമാനമൂർദ്ധനി,
ധഗ-ദ്ധഗ-ദ്ധഗ-ജ്ജ്വലല്ല ലാട പട്ട പാവകേ
കിശോര ചന്ദ്രശേഖരേ രതിഃ പ്രതിക്ഷണം മമ ...2

ധരാധരേന്ദ്ര നന്ദിനീ വിലാസബന്ധു ബന്ധുര-
സഫുരദ്ദിഗന്ത സന്തതി പ്രമോദമാന മാനസേ,
കൃപാ കടാക്ഷ ധോരണീ നിരുദ്ധ ദുർദ്ധരാപദി
ക്വചിദ്ദിഗംബരേ മനോ വിനോദമേതു വസ്തുനി…3

ജടാ ഭുജംഗ പിംഗള സ്‌ഫുരത്ഫണാ മണിപ്രഭാ
കദംബ കുങ്കുമ ദ്രവപ്രലിപ്ത ദിഗ്വധൂമുഖേ,
മദാന്ധ സിന്ധുര-സ്‌ഫുരത്ത്വ-ഗുത്തരീയ മേദുരേ
മനോ വിനോദമദ്ഭുതം ബിഭർത്തു ഭൂതഭർതരി ...4

സഹസ്ര ലോചന പ്രഭ്രുത്യ ശേഷലേഖ ശേഖര
പ്രസൂന ധൂളി ധോരണീ വിധുസരാംഘ്രി പീഠഭൂഃ
ഭുജംഗരാജമാലയാ നിബദ്ധജാടജൂടകഃ ശ്രിയൈ
ചിരായ ജായതാം ചകോരബന്ധു ശേഖരഃ ...5

ലലാട ചത്വരജ്വല-ദ്ധനഞ്ജയ-സ്‌ഫുലിംഗഭാ-
നിപീത പഞ്ചസായകം നമന്നിലിംപനായകം,
സുധാമയൂഖലേഖയാ വിരാജമാനശേഖരം
മഹാ കപാലി സംപദേ ശിരോ ജടാലമസ്തു നഃ ...6

കരാള ഫാല പട്ടികാ ധഗദ്ധഗദ്ധഗജ്ജ്വല-
ദ്ധനഞ്ജയാധരീകൃത പ്രചണ്ഡ പഞ്ചസായകേ,
ധരാധരേന്ദ്ര നന്ദിനീ കുചാഗ്ര ചിത്ര പത്രക
പ്രകല്പനൈക ശില്പിനി ത്രിലോചനേ മതിർമ്മമ ...7

നവീന മേഘ മണ്ഡലീ നിരുദ്ധദുർദ്ധര സ്‌ഫുരത്
കുഹൂനിശീഥിനീതമഃ പ്രബന്ധ ബന്ധുകന്ധരഃ
നിലിംപനിരർഝരീ ധര-സ്തനോതു കൃത്തിസിന്ധുരഃ
കലാനിധാനബന്ധുരഃ ശ്രിയം ജഗദ്ധുരന്ധരഃ ...8

പ്രഫുല്ലനീല പങ്കജ പ്രപഞ്ച കാലിമ പ്രഭാ-
വിലംബി കണ്ഠ കംദലീ രുചിപ്രബദ്ധകം ധരം,
സ്വരച്ഛിദം പുരച്ഛിദം ഭവച്ഛിദം മഖച്ഛിദം
ഗജച്ഛിദാന്ത കച്ഛിദം തമന്തക ച്ഛിദം ഭജേ ...9
അഗർവ സർവ മംഗളാ കളാ കദംബ മഞ്ജരീ
രസപ്രവാഹ മാധുരീ വിജൃംഭണാ മധുവ്രതം,
സ്മരാന്തകം പുരാന്തകം ഭവാന്തകം മഖാന്തകം
ഗജാന്ത കാന്ധ കാന്തകം തമന്ത കാന്തകം ഭജേ ...10

ജയത്വ ദഭ്രവി ഭ്രമഭ്രമദ്ഭുജംഗമശ്വസ
ദ്വിനിര്‍ഗമത്  ക്രമസ്ഫുരത്  കരാള ഫാലഹവ്യവാട്,
ധിമിദ്ധിമിദ്ധിമിധ്വനന്മൃദങ്ഗ തുംഗമംഗള
ധ്വനി ക്രമ പ്രവർത്തിത പ്രചണ്ഡ താണ്ഡവഃ ശിവഃ ...11

ദൃഷദ്വിചിത്ര തല്പയോർഭുജംഗ മൗക്തികസ്രജോർ
-ഗരിഷ്ഠരത്നലോഷ്ഠയോഃ സുഹൃദ്വിപക്ഷ പക്ഷയോഃ
തൃണാരവിന്ദചക്ഷുഷോഃ പ്രജാമഹീ മഹേന്ദ്രയോഃ
സമം പ്രവർത്തയന്മനഃ കദാ സദാശിവം ഭജേ ...12

കദാ നിലിംപ നിർഝരീ നികുഞ്ജകോടരേ വസൻ
വിമുക്തദുർമ്മതിഃ സദാ ശിരഃ സ്ഥമഞ്ജലിം വഹൻ,
വിമുക്തലോലലോചനോ ലലാട ഫാലലഗ്നകഃ
ശിവേതി മന്ത്രമുച്ചരൻ  സദാ സുഖീ ഭവാമ്യഹം ...13

ഇമം ഹി നിത്യമേവ മുക്തമുത്തമോത്തമം സ്തവം
പഠൻ സ്മരൻ ബ്രുവന്നരോ വിശുദ്ധിമേതി സന്തതം,
ഹരേ ഗുരൗ സ ഭക്തിമാശു യാതി നാന്യഥാ ഗതിം
വിമോഹനം ഹി ദേഹിനാം സുശങ്കരസ്യ ചിന്തനം ...14

പൂജാവസാനസമയേ ദശവക്ത്രഗീതം യഃ
ശംഭുപൂജനമിദം പഠതി പ്രദോഷേ,
തസ്യ സ്ഥിരാം രഥഗജേന്ദ്രതുരംഗ യുക്താം
ലക്ഷ്മീം സദൈവ സുമുഖീം പ്രദദാതി ശംഭുഃ ...15

(ഇതി ശ്രീരാവണവിരചിതം ശിവതാണ്ഡവസ്തോത്രം സംപൂർണ്ണം.)

.

September 01, 2019

கீதா உபதேசம்


ஒரு அற்புதமான, வித்தியாசமான, மகாபாரத பதிவு, கீதா உபதேசம் குறித்து தெளிவு:

மாவீரன் அர்ச்சுனன் கிருஷ்ணனிடம்,

ஐயனே, பிதாமகன் பீஷ்மர், தலைவன் தர்மர், பக்திமான் பீமன் இவர்களெல்லாம் இருக்க அவசரபுத்தியும், கோபமும் கொண்ட எனக்கு கீதையை உபதேசிப்பது முறையோ என பணிந்து கேட்க, அதற்கு ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா,

"அர்ஜுனா ! நீ என்னோடு நெருங்கிப் பழகுபவன். என் மீது தோழமை கலந்த அன்புடன் இருப்பவன் என்பதால் நான் உனக்கு கீதையைச் சொல்ல வில்லை. நீ நினைப்பதுபோல் பிதாமகர் பீஷ்மரை அறங்கள் அனைத்துமுணர்ந்த ஒரு மகாத்மாவாக என்னால் கருதமுடியவில்லை. சாஸ்திரங்கள் உணர்வதால்மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிடாது;
கடைப்பிடித்தால்தான் சிறப்பு".

கௌரவர்கள் அதர்மம் புரிகிறார்கள் என்பதறிந்தும் பீஷ்மர் அவர்கள் பக்கமே இருக்கிறார்.
அதேசமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும்போது  தர்மம் வெல்ல சிர்வதிப்பதாகவும் கூறுகிறார். இது இரட்டை வேடம் ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வது சாத்தியமற்றது. எண்ணம், சொல், செயல் இவை ஒன்றாக எவனிடம் இணைந்திருக்கிறதோ அவனே உத்தமன்.  பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை. தர்மர் கீதை கேட்கத் தகுதியானவர் என்பது உன் எண்ணம். அவர் நல்லவர்தான். ஆனால் முன்யோசனை இல்லாதவர். தவறு செய்துவிட்டுப் பிறகு வருந்திக் கொண்டிருப்பது அவர் இயல்பு. தர்மர் நீதியையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவரால் தக்க நேரத்தில் தன் கடமை என்னவென்று உணர இயலவில்லை. பீமனைப் பற்றிச் சொன்னால் பீமன் அளவற்ற பலசாலி. பக்திமானும்கூட. ஆனால் அவனிடம் மனோபலமும் இல்லை; அறிவு பலமும் இல்லை. வீண் கோபத்தில் அவன் விளைவித்த விபரீதங்கள் அநேகம். 

அர்ஜுனா ! நீ இவர்களைப் போன்றவனல்ல மகாவீரன். அதிநுட்பம் வாய்ந்த அஸ்திர வித்தை பல கற்றவன் என்ற போதும்கூட, நீ முன் யோசனை உள்ளவனாய் இருக்கிறாய். அதுதான் உன் தனிச்சிறப்பு. இதோ பார், உன்னைவிட வயதான, அறிவிலும் பெரியவர்களான பலரையும் மதித்து நீ இத்தனை வாதிக்கிறாய்  என்னிடம். களத்திலே நின்றபோதும் உற்றார், உறவினர் மதிப்பிற்குரிய பெரியோர்களையெல்லாம் எப்படிக் கொல்வது  –தேவைதானா இந்த யுத்தமும் இழப்பும் என்றெல்லாம் நீ யோசித்தாய் அத்தனை பேரையும் இழந்து அரசாட்சியைப் பெறுவதால் என்ன பெருமை இருக்க முடியும் என்று கலங்கினாய். பிச்சை எடுத்து வாழவும் நான் தயார் என்று என்னிடம் கூறினாய். நீ பதவி வெறியனல்ல. பழைய விரோதங்களுக்குப் பழி வாங்க வேண்டுமென்று முன்பு நினைத்திருந்த போதும், களத்தில் அவர்களை மன்னித்து 
போரே வேண்டாம் என்று எண்ணுகிற உள்ளம் உன்னிடம் இருக்கிறது.
ஓரளவு நீதி எது அநீதி எது என்று சிந்திக்கிறனாகவே நீ எந்த தருணத்திலும்
இருந்திருக்கிறாய். இதெல்லாம்தான் நான் உனக்கு கீதையை உபதேசிக்கக் காரணங்கள்.

"நீதியான வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்யும் மனவலிமையும் தேவை".

"தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனுக்குத்தான் கீதை கேட்கும் தகுதி உண்டு".

இப்போது புரிகிறதா அர்ஜுனா, நான் உனக்கு கீதை சொல்லக் காரணம் தனிச்சலுகை எதுவுமல்ல;

"தகுதிச் சிறப்புதான்" காரணம். அர்ஜுனன் அப்போதும்கூட அகந்தை எதுவுமற்றவனாய் டக்கத்தோடு ஸ்ரீகிருஷ்ணரைநோக்கி வணங்கி நின்றான்.
ஓம் நமோ நாராயணாய!

Ref:
From Diviner Group.

ஓட்ஸ் என்னும் அரக்கன்

நீரிழிவு நோயாளிகள்,உடல் எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள் ஓட்ஸ் சாப்பிடுவதை பெருமையாக நினைக்கிறார்கள்.

10 ஆண்டுகளுக்கு முன்வரை நம்நாட்டில் ஓட்ஸ் இல்லை. ஆனால் இன்று ஆண்டுக்கு சில ஆயிரம் கோடிகளுக்கு விற்பனை ஆகிறது. இதற்கு பின்னால் பன்னாட்டு வணிக மோசடி உள்ளது.

ஓட்ஸ் ஆஸ்திரேலியாவில் பெரும்பான்மையாகவும் , ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் விளையும் ஒரு பயிர் . அதை அப்படியே உணவாக சாப்பிட முடியாது . சில வழிமுறைகளில் தட்டையாக மாற்றப்படுகிறது . அதையும் கூட நம்ம ஊர் உணவு போல அதிக அளவில் எடுத்துக்கொள்ள முடியாது . சில கிராம் மட்டுமே ( ஸ்பூன் அளவு ) எடுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுகிறோம் . அதிலும் சத்து எதுவும் கிடையாது . பசியை கட்டுபடுத்தும் குணம் மட்டுமே இதற்கு உண்டு.

அதிக விலை கொடுத்து வாங்கும் ஓட்ஸ் -ஐ விட நம் ஊர் ராகியில் பல மடங்கு சத்து உள்ளது . சுமார் ஒரு கிலோ ராகி சாப்பிடுவது 4 கிலோ ஓட்ஸ் சாப்பிடுவதற்கு சமம் . ஒரு கிலோ ராகி மாவு வெறும் 35 ரூபாய் தான் . 4 கிலோ ஓட்ஸ் 140*4= 560 ரூபாய் . எவ்வளவு மடங்கு விலையில் வித்தியாசம் பாருங்கள.

எங்கோ ஆஸ்திரேலியாவில் விளையும் ( அவர்கள் அதிகம் சாப்பிடுவது கிடையாது ) ஓட்ஸை நாம் சாப்பிடுவதில் MNC கொள்ளை அதிக அளவில் உள்ளது . சில ஆண்டுகளாக போலி விளம்பரங்கள் மூலமும் , மருத்துவர்கள் மூலம் கட்டாயப் படுத்தியும் நம்மை அடிமை ஆக்கி விட்டன . [ குறிப்பாக பெப்சி நிறுவனத்தின் QUAKER பிராண்ட் . குளிர்பான தொழிலில் இந்திய நிறுவனங்களை ஒழித்தது போல உணவில் இந்திய பாரம்பரிய உணவுகளை ஒழிக்கப் பார்க்கிறது . ]

அந்தந்த நாடுகளிருந்து இங்கு நம் இந்தியாவுக்கு வர ஆகும் எரிபொருள் செலவு , MNC நிறுவனங்களின் கொள்ளை லாபம் எல்லாம் சேர்த்து பயனற்ற பொருளை அநியாய விலைக்கு நம் தலையில் கட்டுகின்றன.

அதைவிட ராகி , கம்பு , சோளம் , திணை , வரகு , சாமை போன்ற நம் நாட்டு தானியங்கள் எல்லாம் பலமடங்கு சத்துள்ளவை . விலையும் குறைவு !

சத்துநிறைந்த நம் பாரம்பரிய உணவு இருக்க சக்கையை உண்டு நம் பணத்திற்கும் உடல்நலத்திற்கும் வேட்டு வைக்கலாமா ?

இதை என்றென்றும் சிந்தையில் இருத்துங்கள் !
அந்நிய பொருட்களை அநியாய விலைக்கு வாங்குவதை அறவே நிறுத்துங்கள் !

Courtesy:முனைவர் ஆரோக்கிய ராசு.

Note:- Individual's opinion, not that of Blogger.

சரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்

ஒவ்வொரு பண்டிகைக்குப் பின்னாலும் தத்துவச்சிறப்பு உள்ளது. இதனை அறிந்துகொண்டால், அந்தப் பண்டிகையை கொண்டாடுவதில் உள்ள மகிழ்ச்சியும் பலனும் பன் மடங்கு அதிகரிக்கும். சரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம் அறிவும் ஆற்றலும். அறிவின் அடிப்படையில் ஆற்றல் பெற்றுவாழ்வில் வெற்றி பெற வேண்டும். அறிவுக்கான பண்டிகை சரஸ்வதிபூஜை. ஆற்றலுக்கும், ஆற்றலை வெளிப்படுத்துவதற்கும் கல்வியும், கருவிகளும் அவசியம். எனவே, கல்வியைத் தரும் புத்தகங்களுக்கும், ஆற்றலைத் தரும் கருவிகளுக்கும் சரஸ்வதி பூஜை அன்று வழிபாடு நடக்கிறது.

இவை இரண்டின் வெற்றியைக்குறிப்பது அடுத்தநாள் விழாவான விஜயதசமி. அம்புபோட்டு சூரனை வெற்றி கொண்ட நாள் விஜயதசமி. அறிவு எனும் அம்பினால் உள்ளே அறியாமை, பொறாமை, கொடுமை, இயலாமை, மதியாமை, போன்ற சூரர்களை வெற்றி கொள்வது விஜயதசமி. இப்பண்டிகைகள் நவராத்திரி விழாவின் கடை நாட்களில் வருகிறது. நவ – ஒன்பது. ராத்திரி – இரவு. புரட்டாசி மாதம், அமாவாசைக்குப் பின் வரும் ஒன்பது வளர்பிறை நாட்கள் இந்தப் பண்டிகைக்கான காலமாகும்.

அது ஏன் 11 நாள், 12 நாள், 15 நாள் என்றில்லாமல் 9 நாட்கள் கொண்டாட வேண்டும்? 9 என்பது மிக முக்கியமான எண். 9 க்கு மேல் எண் இல்லை. இதற்குப்பின்னால் எழுதப்படும் எந்த எண்ணையும் இதற்கு முன்னால் உள்ள எண்களின் இணைப்பில்தான் எழுதமுடியும். எனவே ஒன்பதுக்கு மேல் எண் இல்லை, நவராத்திரி பூஜைக்கு மேல் ஒருபூஜை இல்லை.
ஒன்பது என்பதின் தத்துவம்.

ஒன்பது என்கிற எண் பலதத்துவங்களை எடுத்து சொல்கிறது. நவமணிகள், நவரசங்கள், நவவித சம்பந்தம் என்று பல உள்ளன. அதைப்போலவே நவ இரவுகள் முக்கியம். இவற்றை ஒன்பது கூறுகளாக்கி படிப்படியாகப் பூஜை செய்தால், பத்தாவது கூறான வெற்றி விடியலை நோக்கி, பக்தர்களை அழைத்துச் செல்லும்.

மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் மனிதர்களின் பரிணாம வளர்ச்சியை ‘புல்லாகி பூடாகி புழுவாய் மரமுமாகி பல்மிருகமாகி என்று பாடுகிறார். இதனை உணர்த்துவதுபோல முதல் படியில் தாவரங்களில் தொடங்கி அடுத்தடுத்த படிகளில் விலங்குகள், மனிதர்கள், தேவர்கள், ரிஷிகள் என வளர்ச்சி நிலைகளை நோக்கியபயணமாக கொலுப்படிகள் அமைக்கப்படுகின்றன.

எல்லா உயிர்களையும் சமமாக மதித்து, வாழ்ந்து, தெய்வநிலையை நோக்கி மனிதன் உயரவேண்டும் என்பதை உணர்த்து வதற்காகத்தான் நவராத்திரி உற்சவங்கள் வீடுகளிலும், திருக்கோயில்களிலும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. நவராத்திரி விழா தமிழகத்தில் மட்டுமல்லாது உலகெங்கிலும் கொண்டாட பட்டுவரும் விழா. சைவம், வைணவம், சாக்தம் (சக்தி வழிபாடு) ஆகியவை சார்ந்த கோயில்களில் இது கொண்டாடப்படுகிறது. அதாவது சிவாலயங்கள், வைணவ ஆலயங்கள், அம்மன் ஆலயங்கள் ஆகிய ஆலயங்களில் கொண்டாடப் பட்டுவரும் விழா இது.

வைணவ ஆலயங்களான திருமலை, திருவரங்கம், திருவல்லிக்கேணி முதலிய ஆலயங்களில் தாயார் புறப்பாட்டோடு இவ்விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாகத் திருவரங்கத்தில் கொலு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு நவராத்திரி உற்சவம் கொண்டாடப்படுகிறது. சைவ ஆலயங்களிலும் அம்பாள் சன்னிதிகளிலும் விசேஷவழிபாடு நடந்து, சொற்பொழிவுகள், இன்னிசை கச்சேரிகள் எனச் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு அம்மன் ஆலயத்திலும் அம்மனுக்கு தினசரி ஒவ்வொரு வடிவத்தில் அலங்காரம் செய்யப் பட்டுக் கொண்டாடப்படுகிறது. பத்து நாட்கள் உற்சவம் என்றபெயரில், தசரா விழாவாக கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இப்படி நாடே கொண்டாடும் நவராத்திரி விழா, நம்மிடமுள்ள இருட்டை, மயக்கத்தை, அறியாமையை, சக்தியின்மையை படிப்படியாக விலக்கி வெற்றியைநோக்கி அழைத்துச் செல்லும் திருவிழா என்பதே நவராத்திரியின் தத்துவம். நவராத்திரி விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு என்றாலும் அதில் விசேஷமான நாட்கள் கடைசி மூன்றுநாட்கள். அஷ்டமி, நவமி, தசமி.

சக்தியின் எல்லையற்ற வடிவம்
சக்தியின் எல்லையற்ற ஆற்றலின் வடிவம் துர்க்கை. துர்க்காஷ்டமி என்பது அஷ்டமியின் சிறப்பு. துர்க்கை கண்ணனின் தங்கை என ஸ்ரீமத்பாகவதம் கூறுகிறது. தீமையை அழிப்பதற்கு துர்க்கை தோன்றினாள். யஜூர் வேதத்தில் உள்ள துர்கா ஸூக்தம், எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதனைப் போக்கி, காப்பாற்றுவதற்கு நீ இருக்கும்போது எங்களுக்கு என்ன கவலை என்று சொல்லி, துர்க்கையின் பெருமையை விளக்குகிறது.

அடுத்த நாள் நவமி. அன்று சரஸ்வதி தேவி வழிபாடு. சரஸ்வதி, படைப்புக் கடவுளான நான்முகனின் துணைவி. படைப்புக்கு அறிவும் ஆற்றலும் அவசியம் என்பதால் சரஸ்வதி பூஜையை நவமியில் கொண்டாடுகிறோம். அடுத்து தசமி. ஒன்பது நாட்களில் பெற்ற கூட்டு சக்தி வெளிப்பட்டு வெற்றி எனும் பலனைத் தரும் நாள் என்பதால் நவ அம்பிகைகளின் மொத்த வடிவம் சக்தி என்பது ஐதீகம்.
-₹₹₹-
Curtesy:cbk