July 01, 2021

மார்கழி ...திருப்பாவை



திருப்பாவை

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம் மேய்த் துண்ணும் குலத்திற் பிறந்து, நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு
உற்றாமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். 29

வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்பு றுவ ரெம்பாவாய் 30.

(ஸ்ரீ ஆண்டாள் திருவடிகள் சரணம்)
...
பெரியாழ்வார் அருளிச்செய்த

1. திருப்பல்லாண்டு

தனியன்
குருமுகமந்தீத்ய ப்ராஹ வேதாநசேஷாந்
நரபதிபரிக்லுப்தம் சுல்கமாதாதுகாம: |
ச்வசுரமமரவந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்
த்விஜகுல திலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி ||

நேரிசை வெண்பா

மின்னார் தடமதிள்சூழ் வில்லிபுத்தூ ரென்றொருகால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தா னென்றுரைத்தோம் கீழ்மையினிற் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து.
பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று
ஈண்டிய சங்க மெடுத்தூத - வேண்டிய
வேதங்க ளோதி விரைந்து
கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று.
***
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!
உன் சேவடி செவ்விதிருக் காப்பு...... 1

அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர்புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும்
பல்லாண்டே ......2

வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல் வந்துமண்ணும
மணமும் கொண்மின்
கூழாட்பட்டுநின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட்காலும்பழிப்பிலோம் நாங்களிராக்கதர்வாழ், இலங்கை
பாழாளாகப்படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே...... 3

ஏடுநிலத்திலிடுவதன் முன்னம்வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்தொல்லை கூடுமினோ
நாடுநகரமும் நன்கறிய நமோநாராயணாயவென்று
பாடுமனமுடைப்பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே.......4

அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை
இண்டைக்குலத்தை யெடுத்துக்களைந்த இருடீகேசன் தனக்குத்
தொண்டக்குலத்திலுள்ளீர்! வந்தடிதொழுது ஆயிரநாமம்
சொல்லிப்
பண்டைக்குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டென்மினே..... 5

எந்தைதந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி
வந்துவழிவழியாட் செய்கின்றோம் திருவோணத்திருவிழாவில்
அந்தியம் போதிலரியுருவாகி அரியையழித்தவனைப்
பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதுமே. 6

தீயிற்பொலிகின்ற செஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின்
கோயிற்பொறியாலேயொற்றுண்டு நின்று குடிகுடியாட்
செய்கின்றோம்
மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும் பொழிகுருதிபாயச்
சுழற்றியவாழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
நெய்யெடை நல்லதோர் சோறும் நியதமுமத்தாணிச் சேவகமும்
கையடைக்காயும் கழுத்துக்குப்பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிடநல்ல தோர்சாந்தமும் தந்து என்னை
வெள்ளூயிராக்கவல்ல
பையுடைநாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுதுமே..    7

உடுத்துக்களைந்தநின் பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்ததுழாய்மலர் சூடிக்களைந்தன சூடுமித் தொண்டர்களோம்
விடுத்ததிசைக்கருமம் திருத்தித் திருவோணத்திருவிழாவில்
படுத்தபைந்நாகணைப் பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டு
கூறுதுமே ...9

எந்நாளெம் பெருமான் உன்தனக்கடியோ மென்றெழுத்துப்பட்ட
அந்நாளே, அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திருமதுரையுள்சிலை குனித்து, ஐந்தலைய
பைந்நாகத் தலைப்பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு
கூறுதுமே.... 10

அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன்,
அபிமான துங்கண்
செல்வனைப் போலத் திருமாலே! நானுமுனக்குப்பழ வடியேன்
நல்வகையால் நமோநாராயணாவென்று நாமம் பலபரவிப்
பல்வகையாலும் பவித்திரனே! உன்னைப் பல்லாண்டு
கூறுவேன். ...11

பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியைச்,
சார்ங்கமென்னும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன்
விரும்பியசொல்
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர்
பல்லாண்டே.... 12

அடிவரவு :- பல் அடி வாழ் ஏடு அண்டம் எந்தை தீ நெய் உடுத்து எந்நாள் அல்வழக்கு பல்லாண்டு வண்ணம்.
(ஆதி கூறுதும், அநந்தரம் கூறுமின், அண்டம் என்மின், எந்தை பாடுதும், தீ உடுத்து எந்நாள் கூறுதும், நெய்யும்
அல்லும் கூறுவனே.)
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
-:0:-
(to be continued)
🍀🌺🍀

Next

ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சி
🍀🌺🍀

No comments: